திண்டிவனம் உரோசனை தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ‘‘எழுமின் விழுமின் 2011’’ என்கிற கல்வி சிறப்பு முகாமின் நிறைவு விழா 27.02.2011 அன்று மாலை நடைபெற்றது. மருத்துவம், பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அரோரா அறக்கட்டளை மூலம் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த சிறப்பு கல்வி முகாமினை 26, 27 ஆகிய இரண்டு நாட்களும் நடத்தினார்கள். 26&ஆம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமாயல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திண்டிவனம் நகரில் நடத்தப்பட்டது.
கல்வி முகாமின் நிறைவு விழா 27.02.2011 அன்று மாலை பள்ளியில் நடைபெற்றது. அரோரா அறக்கட்டளை உறுப்பினர் பாலாஜி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் திரு.சண்முகம் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், திண்டிவனம் கல்வி மாவட்ட ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன், நகர மன்ற மற்றும் பள்ளி அறக்கட்டளை உறுப்பினருமான வழக்கறிஞர் மு.பூபால், விழுப்புரம் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.மோகனசுந்தரம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனோகரன், அரிமா தனபால், ஓய்வு பெற்ற ஆசிரியர் மான்.கு.ஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டி, திருக்குறள், ஓவியம். பாடல் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவர் திரு.சண்முகம் பரிசுகளை வழங்கினார். மேலும், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் வடிவேல், விஸ்வதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிடோருடன் சுமார் 300&க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ரோசனை பகுதி மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அரோரா அறக்கட்டளை செயலாளர் நவீன்குமார் எழுமின் விழுமின் 2011 கல்வி முகாம் குறித்தும், அறக்கட்டளை தொடங்கிய விதம், நோக்கம் குறித்தும் பேசினார். பள்ளி உதவி ஆசியர் கார்திக், இரண்டு நாள் முகாமில் மாணவர் கற்றுக்கொண்டவைகள் குறித்துப் பேசினார். பள்ளி மேலாளர் முருகப்பன் தாய்த்தமிழ் கல்வி முக்கியத்துவம் குறித்துப் பேசினார். அரோரா அறக்கட்டளை உறுப்பினர் மேகநாதன் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment