தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 2000-ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. அந்த ஆண்டு ரோசனைப் பகுதியில் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய 35-க்கும் மேற்பட்டோரில், ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்ச்சியடைந்தார். கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையினை மாற்றவேண்டுமென்றும், மாணவர்களை முன்னேற்றவேண்டுமென்றும் திட்டமிட்டு தொடங்கப்பட்டதுதான் 10 ஆம் மாணவர்களுக்கான இலவயப்பயிற்சி. முதலில் தொடங்கிய 2000-ஆம் ஆண்டு, பயிற்சியில் பயின்று தேர்வெழுதிய 11 பேரில் 9 பேர் தேர்ச்சியடைந்தனர். ரோசனைப்பகுதி கல்வி வரலாற்றில் மொத்தமாக இத்தனைபேர் தேர்ச்சியடைந்தது இதுதான் முதல் முறை. தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு ஆண்டு பயிற்சியிலும் பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியும் அடைந்தனர். மொத்தமாக இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இலவயப் பயிற்சியில் பயின்று பட்டதாரிகளாகவும், ஆசியர்களாகவும் உள்ளனர். முக்கியமாக குறிப்பிடவேண்டியது, முதல் இரண்டு ஆண்டு பயிற்சி படித்த மாணவர்கள் பட்டம் முடித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடங்களை நடத்தினர். அவ்வாறு பயிற்சி பயின்ற ரமா மற்றும் எத்திராஜ் ஆகிய இருவரும் இப்போது தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி நடத்தமுடியாமல் போனது. இந்த ஆண்டு எப்படியும் பயிற்சியினை நடத்திடவேண்டும் என முடிவெடுத்து தொடங்கினோம்.
இன்று 09-01-12 பயிற்சியின் தொடக்க நிகழ்வு தொடக்கப்பட்டது. இதில் இரு முக்கியமான அம்சங்கள் உள்ளன. தாய்த்தமிழ் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் முதல் குழு மாணவர்களும் இதில் உள்ளனர். மேலும், முதல் 2 ஆண்டுகளில் நடைபெற்ற பயிற்சிகளில் அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் திரு.அப்பண்டராஜன் அவர்கள், தற்போது பதவி உயர்வு பெற்று, ஒலக்கூர் வட்டார தொடக்கக் கல்வி அலுவலராக உள்ளார். இவர் இந்த ஆண்டுக்கான பயிற்சியினை தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாக்வும். கல்விப் பணி என்பது தலைமுறைகளை உருவாக்கும் பணி, நீங்களும் இப்பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கிய உதவித் தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment